பூனை தரை மேல் நடக்கும் போது அதன் தலைக்கு மேல் பாதுகாப்பாக ஆந்தை பறக்கிறது. சில நேரங்களில் ஆந்தை பூனையின்
கால் இடுக்குகளில் அமர்ந்து கொண்டு நான் ரொம்ப பாதுகாப்பாக இருக்கேன் என பெரிய கண்களால் முழித்து பார்க்கிறது.
இந்த இரண்டு நண்பர்களுக்கும் சில நேரம் ரொம்ப நெருக்க உணர்வு ஏற்பட்டால் பூனை ஆந்தையின் முகத்தை தன் முகத்தால் வைத்து தனது பாசத்தை வெளிப்படுத்துகிறது. ஆந்தையும் „நீ என் நண்பன்“ என்று பூனைக்கு முத்தம் கொடுப்பதை போல போஸ் கொடுக்கத் துவங்கி விடுகிறது. இந்த அரிய நண்பர்கள் வலம் வரும் வீடியோ காட்சி எங்கு எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.


புகழ்பெற்ற எட்வர்டு லியர் கவிதையில் ஆந்தையும், குட்டிப் பூனையும் கடலுக்குள் பட்டாணி பச்சை நிற படகில் பயணித்ததாக விவரிக்கப்பட்டு இருக்கும். கவிஞனின் அற்புதமான அந்த நட்பு எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த இரு பிராணிகளும் எங்கேயும் கைகோர்த்து செல்கின்றன. இந்த நண்பர்களில் ஆந்தையின் ஆதிக்கம் அதிகம்.
ஆனாலும் நண்பனின் சேட்டைகளை பொருட்படுத்தாமல் பூனை எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது. சில நேரங்களில் பூனை காதை உயர்த்திக் கொண்டு எதிரே எலிக்குட்டி வருகிறதா என முறைத்துப் பார்க்கும். அதே மாதிரி பார்வையை ஆந்தையும் பார்க்கும்போது ரொம்ப வேடிக்கையாக உள்ளது.