
என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில். உணவு உற்பத்தியில்
தன்னிறைவு அடையாத தேசங்களில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைக் காண்கிறோம். எனவே விவசாயம் நாட்டின் ஆணிவேர் ஆகிறது. விவசாயம் சார்ந்ததாக இருந்ததால் தான், ‘’
கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு’’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், நமது நாட்டின் விவசாயம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது?
தற்போது யாழ் குடாநாட்டு விவசாயிகள் வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பல விவசாயிகள் செய்வதயியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் தீவக விவசாயிகளும் இடம் பெறுகின்றனர்.
சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் வெட்கித் தலைகுனியும் எமது விவசாயிகள் இதே காலகட்டத்தில் எமது ஊரிலே இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போன்ற தன்மானத்துடன் வாழப் பழகிவிட்ட, சொந்தக் காலில் நின்று பழகிப்போன உழவர்கள், தாங்கள் இத்தனை காலம் நம்பிவந்த விவசாயம் தங்களைக் கைவிட்டு விடுவதைத் தாங்க முடியாமல் தான் இறுதி முடிவு எடுக்கிறார்கள். அவர்களை மீள முடியாத விஷச் சூழலில் தள்ளிவிடுகிறது வட்டியும், கடனும்.
விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் முக்கியமான சிக்கல். இதற்கு விவசாயத்தை திட்டமிட்ட முறையில் அணுகாத விவசாயிகளும் ஒரு காரணம். விவசாயிகளை இந்த விஷச் சூழலில் தள்ளிவிடும் இயற்கையும் ஒரு காரணம். மொத்தத்தில் இப்போதுள்ள விவசாய முறையே விவசாயிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதைக் காண்கிறோம். இந்த நிலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது எப்படி?
விவசாயிகளைப் பாதுகாப்பது ஏன் முக்கியமாகிறது? ஏனெனில்இ நாட்டின் பொருளாதாரத்தில் சரிபாதிக்கு மேல் பங்களிப்பது விவசாயம் தான். நாட்டு மக்களுக்கு பசியாற உணவளிப்பது விவசாயம் தான்.
இலங்கை நாட்டு மக்கள் தொகை 20.2 mn (census Report – 2012) சூழலில், இன்றும் 40% பேருக்கு வேலை வாய்ப்பளிப்பது விவசாயமே. நாட்டின் ஊரக, கிராமப் புறங்களை இன்றும் வாழச் செய்வது விவசாயமே. விவசாயம் குலையுமானால், நாட்டின் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும். பஞ்சம் தாண்டவமாடும். தேசிய ஒருமைப்பாடும் கானல்நீராகும். இவை வெறும் கற்பனை மிரட்டல்கள் அல்ல.
ஆபிரிக்காவில் விவசாயம் நொடிந்ததால் தத்தளிக்கும் தேசங்கள் பல. ஒருகாலத்தில் பொன்னுலகாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் கூட விவசாயிகளின் வீழ்ச்சியால் தான் ஏற்பட்டது. தொழில்மயமாதலுக்கு விவசாயத்தை ஒப்புக் கொடுத்த ரஷ்ய சர்வாதிகாரிகளின் கொடுங்கோன்மையால், 1990களில் ரஷ்யாவில் கடும் உணவுப்பஞ்சமும்இ சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் நேரிட்டன. இவை சமீபகால சரித்திரங்கள்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் தெரியாமல் அந்தக் குறளை (104-1) சொல்லி விடவில்லை. அதனால் தான் விவசாயத்தைக் காத்தாக வேண்டியுள்ளது. அதற்கு, விவசாயத்தை குலத்தொழிலாகக் கொண்ட விவசாயிகளைக் காத்தாக வேண்டும். அதற்கு விவசாயம் தற்போது சந்திக்கும் சிரமங்களைக் கண்டறிந்தாக வேண்டும். ”நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பதும் திருவள்ளுவர் கூறிய இலக்கணம் அல்லவா?
அந்த அடிப்படையில் தான் இந்த கட்டுரையினை எழுதுகின்றேன். வானம் பார்த்து செய்யும் சாகுபடி, விளைச்சல் தந்தாலும் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே நான் கண்டு வந்திருக்கினறேன். எனினும், எனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த கட்டுரையை எழுதத் தூண்டி இருக்கிறது.
விவசாயத்தின் அடிப்படை இயற்கை. வான்மழை பொய்த்தால் விவசாயம் தாங்காது. அப்படியே தாக்குப் பிடித்தாலும், இறுதியில் கிடைக்கும் விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காவிட்டால் என்ன பயன்? ”காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்?” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரைப்பாடல் இன்றும் பொருத்தமாக இருப்பது நிதர்சனம் அல்லவா? ஆக, விவசாயம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அதன் களச் சிக்கல்கள் தவிர, வர்த்தக சிக்கல்களையும் சரிப்படுத்தியாக வேண்டும்.
விவசாயிகள் ஒரு பொருளை உற்பத்தி செய்ய 24 மணி நேரமும் பாடுபடுகின்றனர். அதற்குத் தேவையான இடுபொருள்களான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகளின் விலை அதிகரித்திருக்கிறது. விவசாயக் கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது.
இயற்கை வஞ்சித்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை வேறு பாதிக்கிறது. இத்தனைக்கும் பிறகு விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றால், ஒரு விவசாயி எதற்காகப் பாடுபட வேண்டும்? அரசும் விவசாயிகளைக் கைதூக்கிவிடத் தயாரில்லாதபோது, அவர்கள் விவசாயத்தைக் விட்டு வேறு தொழிலுக்கு மாறுவது நியாயம் தானே?
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், நம்மால், விளைபொருள்களைப் பாதுகாக்கும் சேமிப்பு, பதனீடு செய்யும் தொழிற்சாலை மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவிலும் கூட அமைக்க முடியவில்லை. அரசு அளிக்கும் குறைந்த பட்ச ஆதார விலைகளும் கூட எல்லா விளைபொருளுக்கும் கிடைப்பதில்லை. கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயி அடைய வேண்டிய பயன்களை பதுக்கல்காரர்களும், பெரு வர்த்தக நிறுவனங்களுமே அடைகின்றனர். அரசியல்வாதிகள் அவர்களைச் சார்ந்திருப்பதால் விவசாயி கைவிடப்படுகிறான். இந்நிலையை மாற்ற வேண்டும்.
அதற்கான 05 செயல்திட்டங்களையும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.
1. முதல் செயல் திட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தல், நிலத்தை வரைமுறைப் படுத்துதல், இலக்குகளை நிர்ணயித்தல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தல் ஆகியவை குறித்து விளக்கி இருக்கிறார்.
2. இரண்டாவது செயல்திட்டத்தில், தகவல் மையங்கள், அரசு விவசாய மையம், அரசு விவசாய வங்கி ஆகியவை குறித்தும் அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் தேவை குறித்தும் விளக்குகிறார்.
3. மூன்றாவது செயல் திட்டம் பயிர்க்கடன் வழகுவது, அதை வசூலிப்பது, அரசு விவசாய வாகனம் ( மாணிய அடிப்படை உழவுயந்திரம், நீர் இறைக்கும் இயந்திரம்), விவசாய நீர் நிலைகளினை புனருத்தாரணம் செய்தல் குறித்து அலசுகிறது.
4. இயற்கை மற்றும் செயற்கைக் காரணங்களால் விவசாயி பாதிக்கப்படும்போது அவனைக் கைதூக்கிவிட ஓர் உறுதியான கரம் தேவை. அதற்கு பயிர்க் காப்பீடு (Insurance for crops) அவசியம். இதில் முறைகேடு நடக்காமல் தடுக்க தகுந்த அமைப்பும் ஆய்வும் அவசியம்.

அடுத்து விளைபொருள்களை சேதமின்றிப் பாதுகாக்கவும், விலை குறையும் தருணங்களில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவும் பதனீடு தொழிற்சாலை தேவை குறித்து விளக்குகிறார். விளைபொருளின் மாற்றுப் பயன்பாடுகளையும் விவசாயிகளே கூட்டுறவு முறையில் மேற்கொள்வதும் (உதாரணம்: தக்காளி ஜாம் தொழிற்சாலை) குறிப்பிடப்படுகிறது.
இந்தப் புதிய செயல் திட்டத்தால் அரசுக்கும் லாபம். மக்களுக்கும் லாபம். விவசாயிகளுக்கும் லாபம் என்கிறார், நூலாசிரியர். சொல்வது யார்க்கும் எளியதே. எனினும், இதை ஆராயும் கடமை அரசுக்கு அல்லவா இருக்கிறது?
5. இறுதியாக விவசாயிகளும் தொலைநோக்கில் சிந்திக்க வேண்டும். நவீன உத்திகளைக் கையாள வேண்டும். இயற்கை விவசாய முறைகளுக்குத் திரும்ப வேண்டும். மாற்று விவசாய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த அரசு நிர்வாக முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்- அப்போது தான் நிலையான வேளாண்மை தொடர முடியும்’ என்கிறார்.
மொத்தத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் விவசாயத்துறை பேராசிரியர்கள் செய்ய வேண்டிய அரும்பணியை பலவுள. ”வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல, மாற்றுக்கருத்துக்கள், மாற்றுச் சிந்தனையாளர்களால் இந்த மண்ணை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பது போல வறட்சி பிரதேசங்களில் முன்னெடுக்கக்கூடிய மாற்று பயிரினங்களினை அறிமுகம் செய்து இத்தீவக பிரதேச விவசாயிகளினது வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என்தபதே எனது கட்டுரையினது நோக்கமாகும்.