
அம்மை நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டவுடன் தினமும் காலையில் முகம் கழுவியபின், சோடா பை கார்பொனேட் கரைசலை தழும்புகளின் மீது தடவி, 5 நிமிடம் கழித்து கழுவவும். அரிசி
மாவையும் தயிரையும் சேர்த்துக் கலந்த பேஸ்டை முகத்தில் தடவி மெதுவாக தடவவும். டஹ்ழும்புகளின் மீது அதிக கவனத்துடன் தடவி சற்று நேரம் கழித்து கழுவவும்.
முல்தானி மட்டி, ஒரு ஸ்பூன், அரைத்த பாதாம் பருப்பு விழுது 2 ஸ்பூன், 1 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் தேன் மற்றும் முட்டையின் வெண்கரு ஆகியவற்றை கல்ந்து ஒரு பேஸ்ட் தயாரித்து, அத்துடன் பாதாம் எண்ணெயைக் கலந்து வாரம் இருமுறை முகத்தில் தடவி வரவும். தடவும்போது உதடு, கண்கள் தவிர மீதி இடங்களில் தடவவும். 20-30 நிமிடம் ஊறவிட்டுக் கழுவவும். நல்ல குணம் தெரியும்.