
வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலை சுற்றி மயக்கம் ஏற்படுவதற்கு காரணம் சமச்சீரைக் கட்டுபடுத்தும் காதின் உட்பகுதியிலுல்ல உணர்ச்சி நீர்மம், உடல் சுற்றுவது நின்ற பிறகும் தொடர்ந்து சுற்றிக்கொண்டுள்ளது .
ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன . ஆயினும் சில வினாடிகளுக்குள் அந்த நீர்மம் நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது . இது உணர்ச்சி கிறுகிறுப்பு எனவும் அழைக்கப்படும்.
உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவருக்கும் கப்பலில் போகின்ற போது பார்ப்பவருக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது, உடல் சார்ந்த தன்மை ஏதும் இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.